
அஸ்ஸலாமு அலைக்கும் !
அன்பார்ந்த சகோதர ,சகோதரிகளே 12-12-2013 மற்றும் 13-12-2013 ஆகிய தேதிகளில் நமது முஸ்லிம் பொது நலச் சங்கத்தில் 16,17 வார்டு மக்களுக்காண ஆதார் அட்டை பதிவு முகாம் நடைபெறவுள்ளது.நேரில் சென்று பதிவு செய்து பயன்பெறலாம்.
ஆதார் என்றால் என்ன?
ஆதார் கார்ட் நாட்டின் பல பாகங்களிலும் விநியோகம் செய்யப்படுகின்ற இந்நேரத்தில் ஆதார் அட்டை பற்றி நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். மக்கள் மனங்களில் எழும்பும் ஆதார் பற்றின கேள்விகளுக்கு இதோ பதில்கள்
ஆதார் என்பது 12 எண்களைக் இலக்கங்களைக் கொண்ட ஒரு எண். இதை யுனிக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிடி ஆஃப் இந்தியா தனது எல்லா குடி மக்களுக்கும் வழங்குகிறது. இந்த எண்ணில் புகைப்படம் உள்ளிட்ட ஒருவரைப் பற்றின மிக முக்கிய தகவல்கள் ஒரு சென்ட்ரல் டேட்டா பேஸில் பதிய வைக்கப்பட்டிருக்கும். ஆதார் ஒப்புநோக்க எளிதானது மேலும் தனிதன்மையுடையது என்பதால் கள்ள எண்களையும் தவறான தகவல்களையும் தவிர்க்க ஏற்றது. ஜாதி மத பேதங்கள் இல்லாமல் அனைவருக்கும் ஒன்றானது.
1. இது ஒரு 12 இலக்க எண், அட்டை மட்டுமல்ல
2. அனைவருக்கும் ஆனது. கைக்குழந்தைகளுக்குக் கூட. அதாவது ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பிரத்யேக ஆதார் யு.ஐ.டி எண் கொடுக்கப்படும்.
3. அது இங்கு வசிப்பவர்களுக்கு ஒரு அடையாளம் தருகிறது. குடியுரிமை பற்றினது அல்ல. இந்தியர்களுக்கு மட்டுமானதும் அல்ல.
4. ஆதார் கார்ட் பெற்றுக் கொள்வது விருப்பத்தின் பேரிலானது, கட்டாயம் அல்ல.
5. நம் நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்ளலாம். அதாவது அடையாள அட்டை ஏதும் இல்லாதவர்களும் பெற்றுக்கொள்ளலாம்.
6. ஒவ்வொருவருக்கும் ஒரு தனிபட்ட ஆதார் அடையாள எண் வழங்கப்படும். ஒருவருக்கு ஒரு எண்ணுக்கு மேல் கிடைக்காது.
7. யு.ஐ.டி ஒரு தனி நபர் பற்றின அரசாங்க மற்றும் தனிப்பட்ட நிறுவனங்களுக்கு ஆம் அல்லது இல்லை என்று மட்டுமே பதில் அளிக்கும். மேலும் விபரங்கள் ஏதும் யு.ஐ.டி கொடுக்காது.
8.ஆதார் யு.ஐ.டி எண் விபரங்கள் ரேஷன் அட்டை, பாஸ்போர்ட் போன்றவற்றுக்கு பயன்படும்..ஆனால் அவற்றுக்கு மாற்றாகாது.
எதற்காக ஆதார் பெற வேண்டும்?
1. கிராமப்புரங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு மிகப் பயன் தரத்தக்கது
2. தெளிவான அடையாளம் தரும் ஒரு நபருக்கு
3. வங்கிகளில் ஏழைகளும் எளிதில் கணக்கு வைத்துக் கொள்ள ஏது செய்யும்
4. அரசாங்க மற்றும் தனி நபர் நிறுவனங்களின் சேவைகளை ஏழைகளும் எளிதில் பயன்படுத்திக் கொள்ளலாம்
5. பிரயாணிகளுக்கு அடையாளப் பிரச்சினைகளில் இருந்து விடுதலை
6. அரசாங்கத்தின் நலம்தரும் திட்டங்கள் மக்களுக்குப் பயன் தரவும் போய்ச்சேரவும் எளிதாக இருக்கும்
யாரெல்லாம் ஆதார் பெற்றுக்கொள்ளலாம்?
இந்தியாவில் வசிக்கும் மற்றும் யு.ஐ. டி.ஏ. ஐ யின் வெரிஃபிகேஷனை திருப்தி செய்யும் எவரும் ஆதார் பெறலாம்.
என்னென்ன ஆதாரங்கள் தேவைப்படும்?
பதிவு செய்யும் நேரம் தேவைப்படும் ஆவணங்கள்
1. (ஆதார் விண்ணப்பப் படிவம்) Aadhaar application form
2. வசிப்பிடம் பற்றின தகவல்
3. அடையாள அட்டை புகைப்படத்துடன்
ஒவ்வொரு ஊருக்கும் இவை மாறுபடலாம்
தேவைப்படும் தகவல்கள்
1. பெயர்
2. பிறந்த தேதி
3. பால்
4. முகவரி
5. பெற்றோர் மற்றும் காப்பாளர் பற்றின தகவல்
6. தொடர்பு கொள்ள தொலைபேசி மற்றும் ஈ மெய்ல் முகவரி
மேலும்
1. புகைப்படம்
2. 10 விரல் அடையாளங்கள்
3. விழிப்படல அடையாளம்
-அன்புடன்-
S. முகம்மது நவ்சின் கான்.
0 Response to "ஆதார் அட்டை பதிவு முகாம் 12-12-2013 மற்றும் 13-12-2013 ஆகிய தேதிகளில் நமது முஸ்லிம் பொது நலச் சங்கத்தில் நடைபெறவுள்ளது."
Post a Comment