பட விளக்கம் உடைந்த மூடி அகற்றப்பட்டு புதிய சிமெண்ட் மூடி அமைக்கப்பட்டுள்ளது.
கீழக்கரை 17வது வார்டில் புது தெருவில் கழிவுநீர் கால்வாய் மூடி உடைந்த நிலையில் திறந்த வண்ணம் இருந்தது இதனால் அவ்வழியே செல்பவர்கள் குறிப்பாக இரவு நேரங்களில் தவறி விழும் வாய்ப்பு இருந்து வந்தது.இது பற்றி வார்டு உறுப்பினர் ஆனா மூனா என்ற காதர் சாஹிப் சார்பில் பல முறை நகராட்சியிடம் புகார் தெரிவிக்கப்பட்டு இறுதியாக நகராட்சி மூலம் சிமெண்ட் மூடி அமைக்க டெண்டர் கோரப்பட்டது.ஆனாலும் மூடி அமைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை.தொடந்து தாமதமாகி வந்தது.
உடனடியாக சிமெண்ட் மூடி அமைக்க வேண்டிய அவசியம் கருதி தெற்கு தெரு முஸ்லிம் பொது நல சங்க இளைஞர்களும் வார்டு உறுப்பினரும் இணைந்து தாங்களே கால்வாய் மூடிகளை அமைத்தனர்.இதன் மூலம் அப்பகுதியில் நீண்ட காலமாக நிலவி
பிரச்சனை முடிவுக்கு வந்தது.
முக்கியக்குறிப்பு : இந்த தகவல்கள் keelakaraitimes பக்கங்களிலிருந்து பெறப்பட்டது.அனைவரும் தெறிந்துக்கொள்வதற்க்காக இந்தப்பக்கத்தில் வெளியிட்டேன். நன்றி.
0 Response to "கீழக்கரை முஸ்லிம் பொதுநல சங்க இளைஞர்கள் முயற்சியில் திறந்தவெளி கால்வாய்க்கு சிமெண்ட் மூடி !"
Post a Comment