பெருநாள் தொழுகை


பெருநாள் தொழுகையின் அவசியம்
பருவமடைந்த ஆண், பெண் அனைவரும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும். ஜும்ஆத் தொழுகை கடமை என்பதை நாம் அறிவோம். ஜும்ஆ தினத்தில் பெருநாள் வந்தால் ஜும்ஆவிற்குப் பதிலாக பெருநாள் தொழுகையே போதுமானது என்று மார்க்கம் கூறுகின்றது என்றால் பெருநாள் தொழுகை எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம்.
(இது பின்னர் விரிவாக விளக்கப்பட்டுள்ளது)
ஜமாஅத் தொழுகை, ஜும்ஆத் தொழுகை போன்ற கூட்டுத் தொழுகைகல் பெண்கள் பங்கு கொள்ளாமல் தமது வீடுகலேயே தனியாகத் தொழுது கொள்ளலாம் என்று இஸ்லாம் பெண்களுக்குச் சலுகை வழங்கியுள்ளது. அப்படிச் சலுகை வழங்கிய இஸ்லாம் பெருநாள் தொழுகையில் மட்டும் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறது. தகுந்த ஆடை இல்லாவிட்டால் இரவல் ஆடை வாங்கியாவது கலந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
(இதுவும் பின்னர் விளக்கப்பட்டுள்ளது).
மற்ற தொழுகைகளை விட அதிக முக்கியத்துவம் அக்கப்பட்டதில் இருந்து இத்தொழுகையின் அவசியத்தை அறிந்து கொள்ளலாம்.

0 Response to "பெருநாள் தொழுகை"

Post a Comment